####அறிவோம்####
ஆரிய சமாஜம் ஆரிய சமாஜம் கி.பி. 1875ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். கடவுளின் குழந்தைகள் ‘ஆரியா’ என்பதன் பொருள் கடவுளின் குழந்தை என்பதாகும்.அனைத்து ஆன்மாக்களும், கடவுளின் குழந்தைகள் என்றும், அவை கடவுளுக்கு கீழ்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும். உண்மையைத் தேடி தயானந்தரின் இயற்பெயர் மூலசங்கரன். கி.பி. 1824ல் குஜராத்தில் வசதியுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அம்பா சங்கரர் ஆகும். இவரது 20வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா மு...