####அறிவோம்####
கண்ணன் பாட்டு 12. கண்ணன் என் காதலன் -3. (காட்டிலே தேடுதல்) ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம் ரசங்கள்: பயாநகம், அற்புதம். திக்குத் தெரியாத காட்டில் - உனைத் தேடித் தேடி இளைத்தேனே. 1. மிக்க நலமுடைய மரங்கள், - பல விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்) 2. நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும் நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள் மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்) 3. ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு ... (திக்குத்) 4. தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன் சத்தத் தினிற்கலங்கு யானை அதன் முன்னின் றோடுமிள மான்கள் - இவை முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு ... (திக்குத்) 5. கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு கண்ணும் துயில்படர லானேன் - ஒரு வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம் வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு ... (திக்குத்) 6. பெண்ணே உனதழகைக் கண்டு -