####அறிவோம்####
புத்தகங்களும் அதனை எழுதியவர்களும் 1 . "The story of my Experiements with truth (சத்திய சோதனை)" என்ற சுயசரிதையை எழுதியவர் யார்? மகாத்மா காந்தி விளக்கம்: "The story of my Experiements with truth (சத்திய சோதனை)" என்ற சுயசரிதையை எழுதியவர் மகாத்மா காந்தி. மோகன்தாசு கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. 2 . "An Equal Music (அன் ஈக்குவல் மியூசிக்)" என்ற புதினத்தை எழுதியவர் யார்? விக்ரம் சேத் விளக்கம்: "An Equal Music (அன் ஈக்குவல் மியூசிக்)" என்ற புதினத்தை எழுதியவர் "