####அறிவோம்####
கண்ணன் பாட்டு 13. கண்ணன் என் காதலன் -4. (பாங்கியைத் தூது விடுத்தல்) தங்கப்பாட்டு மெட்டு ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம். கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்) கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்; எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். . ... 1 கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள் காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்; அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும் அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். . ... 2 சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும் தோழமை யில்லையடி தங்கமே தங்கம்; என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை யாவும் தெளிவுபெறக் கோட்டு விடடீ!. ... 3 மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ? பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப் பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். ... 4 ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம் தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம். ... 5 சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல