####அறிவோம்####
இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five-Year Plans of India) என்பது 1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஐந்தாண்டுத் திட்டங்களாகப் பகுக்கப்பட்டு திட்டக் குழு (இந்தியா) (1947-2014) மற்றும் நிதி ஆயோக் (2014-2017) மூலம் வடிவமைக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டும் வருகிறது. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956) இந்திய அரசு, தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961) கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒ...