####அறிவோம்####
கண்ணன் பாட்டு 18. கண்ணம்மா என் காதலி - 3. (முகத்திரை களைத்தல்) நாதநாமக்கிரியை - ஆதிதாளம் சிருங்கார ரசம் தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்; வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்; வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி மறைத்தத னாலழகு மறைந்த தில்லை; சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச் சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1 ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ? ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும் ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ? யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு வாக முகத்திரையை அகற்றி விட்டால்? காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ... 2