####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் இந்தியா 'மிஸ் இந்தியா' வாக மகுடம் சூடிய சென்னை பெண்! மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி (anukreethy ) தேர்வு செய்யப்பட்டார். அவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார். இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்று வந்தது. 30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர். இறுதிச் சுற்றுப் போட்டிக்கான நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்சித் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். இதில், தமிழகத்த...