####அறிவோம்####
குடும்ப விளக்கு பகுதி 5 முதியோர் காதல். முதியோர் காதல் அறுசீர் விருத்தம் மூத்த பிள்ளை முதியவரோடு வேடப்பன் தம்பி யான வெற்றிவேல், மனைவி யோடு வேடப்பன் வாழ்ந் திருந்த வீட்டினில் வாழு கின்றான், வேடப்ப னோ,தன் தந்தை வீட்டினிற் குடும்பத் தோடு பீடுற வாழு கின்றான். பெற்றவர் முதுமை பெற்றார்! முதியோருக்கு மருமகள் தொண்டு வேடப்பன் மனைவி யான நகைமுத்து மிகவும் அன்பாய் வேடப்பன் தந்தை தாய்க்கு வேண்டுவ தறிந்தே அன்னார் வாடுதல் சிறிதும் இன்றி வாய்ப்புறத் தொண்டு செய்வாள்; ஆடிய பம்ப ரங்கள் அல்லவா அம்மூத் தோர்கள்? தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம் தலைக்கடை அறைக்குள் அந்தத் தளர்மண வழகர் ஓர்பால் இலக்கியம் படிப்பார்! இன்பத் துணைவியார் கேட்டி ருப்பார்! உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து) அம்மையார் ஒருபால் குந்திப் பலஆய்வார்; துணைவர் கேட்பார்; துயிலுவார்; பழங்கா லத்தார். மணவழகர் உடல்நிலை மணவழ கர்க்கு முன்போல் வன்மையோ தோளில் இல்லை! துணைவிழி, ஒளியு ம் குன்றக் கண்ணாடித் துணையை வேண்டும்; பணையுடல், சருகு! வாயிற் பல்லில்லை! மய...