####அறிவோம்####
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன. சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மின்சார இணைப்பை இது வலுப்படுத்தும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், ஈசிஈசி-யின் ஒரு பகுதியாக சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈசிஈசி-ஐ மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி முன்னணி கூட்டாளியாகும். இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு.சமீர் குமார் கரே, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியா அலுவலகத்தில் இயக்குனராக உள்ள திரு.கெனிச்சி யோகோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் பேசிய திரு.கரே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக ந