####அறிவோம்####
 
 நடப்பு நிகழ்வுகள் - CURRENT AFFAIRS   இந்தியா   முதல்மந்திரி பெயரில் புதிய மாம்பழ வகை !!       உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2 நாள் மாம்பழ கண்காட்சியினை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.   இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.   நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என பெருமிதம் தெரிவித்தார்.  விவசாயிகளின் வருவாய் மற்றும் தேவைகளை இரு மடங்காக உயர்த்த தோட்டக்கலை உதவும் எனவும், இந்த கண்காட்சி அதற்கான முயற்சியாக நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்த கண்காட்சியில் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் விதமாக உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது.       மஹாராஜா டேரக்ட் என்ற புதிய சேவையைத் தொடங்கியது ஏர் இந்தியா       ஏர் இந்தியா நிறுவனம், மஹாராஜா டேரக்ட் (MaharajahDirect) என்ற புதிய பன்னாட்டு போக்குவரத்து சேவையை தொடங்கி உள்ளது.  சொகுசு இருக்கைகள், பணியாளர்களுக்கு புதிய சீருடைகள்...