####அறிவோம்####
வெள்ளையனே வெளியேறு இயக்கம் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் 1937-ல் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று தோன்றியது. மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் (வாக்குரிமை 10% மக்களுக்கு மட்டும் இருந்தது) காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் வெற்றி பெற்றது. முஸ்லிம் லீக்குக்கு ஒரு மாநிலத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 1939, செப்டம்பர் முதல் தேதியன்று ஜெர்மனி போலந்து நாட்டைத் தாக்கியது. செப்டம்பர் மூன்றில் பிரிட்டன் ஜெர்மனிமீது போர் செய்யப் போவதாக அறிவித்தது. அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்திய வைஸ்ராய் இந்தியாவும் ஜெர்மனியோடு போர்நிலையில் இருப்பதாக அறிவித்தார். யாரையும் கலந்து பேசாமல் தானே எடுத்த முடிவு அது. இந்த சர்வாதிகாரப் போக்கு இந்திய மக்களின் விருப்பத்தை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாக உலகத்துக்கு அறிவித்தது. காங்கிரஸ் கட்சி பாசிஸத்துக்கும் நாசிஸத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்திருந்தது. ஆனால், நேரு கூறியதுபோல ‘இந்திய மக்கள் போரில் அடிமைகளாகக் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்ற