####அறிவோம்####
 
  மயங்கொலிச் சொற்கள்       மயங்கொலிச் சொற்கள் :    ண, ன பொருள் வேறுபாடு   அணல் - தாடி, கழுத்து  அனல் - நெருப்பு  அணி - அழகு  அனி - நெற்பொ forறி  அணு - நுண்மை  அனு - தாடை, அற்பம்  அணுக்கம் - அண்டை, அண்மை.  அனுக்கம் - வருத்தம், அச்சம்  அணை - படுக்கை, அணைத்துக்  கொள்ளுதல்  அனை - அன்னை, மீன்  அணைய - சேர, அடைய  அனைய - அத்தகைய  அண்மை - அருகில்  அன்மை - தீமை, அல்ல  அங்கண் - அவ்விடம்  அங்கன் - மகன்  அண்ணம் - மேல்வாய்  அன்னம் - சோறு, அன்னப்பறவை  அண்ணன் - தமையன்  அன்னன் - அத்தகையவன்  அவண் - அவ்வாறு  அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்  ஆணகம் - சுரை  ஆனகம் - துந்துபி  ஆணம் - பற்றுக்கோடு  ஆனம் - தெப்பம், கள்  ஆணி - எழுத்தாணி, இரும்பாணி  ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று  ஆணேறு -ஆண்மகன்  ஆனேறு - காளை, எருது  ஆண் - ஆடவன்  ஆன் - பசு  ஆணை - கட்டளை, ஆட்சி  ஆனை - யானை  இணை - துணை, இரட்டை  இனை - இன்ன, வருத்தம்  இணைத்து - சேர்த்து  இனைத்து - இத்தன்மையது  இவண் - இவ்வாறு  இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)  ஈணவள் - ஈன்றவள்  ஈனவள் - இழிந்தவள்  உண் - உண்பாயாக  உன் - உன்னுடைய  உண்ணல் - உண்ணுதல்  உன்னல் - நினைத்தல்  உண்ணி -...