####அறிவோம்####
பொது அறிவு 1 . உலகப் பயணம் செய்த முதல் கப்பலின் பெயர் என்ன? விக்டோரியா விளக்கம்: விக்டோரியா கப்பல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கப்பல் ஆகும். இது தான் முதன் முதலில் உலகப் பயணத்தை முடித்த கப்பல் ஆகும். 2 . பேக்லைட்டை கண்டுபிடித்தவர் யார்? பேக்லாந்து விளக்கம்: பேக்லைட்டை கண்டுபிடித்தவர் பேக்லாந்து என்ற விஞ்ஞானி ஆவார். 3 . மெட்ரிக் அளவீட்டு முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது? பிரான்ஸ் விளக்கம்: மெட்ரிக் முறை (Metric system) என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும். இந்த முறை, 1799 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்ட mètre des archives மற்றும் kilogramme des archives போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாளடைவில் மீட்டர் மற்றும் கிலோகிராம் போன்ற அலகுகளுக்குரிய வரையறை நுண்ணியமாக திருத்தப்பட்டதோடு, மெட்ரிக் முறையின் கீழ் மேலும் பல அலகுகள் கொண்டுவரப்பட்டன. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு மாற்றுருவங்கள் மெட்ரிக் முறையில் வெளிப்பட்டாலும், ‘அனைத்துலக முறை அலகுக...