####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் 15 - 06 - 2018 சுற்றுச்சூழல் : எளிதில் மக்கும் பயோ - பிளாஸ்டிக்..! அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எளிதில் மக்கும் பயோ பிளாஸ்டிக் பைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் மண்வளமும், அதனை எரிக்கும் போது காற்றும் கடுமையாக மாசடைகிறது. நிலத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழை நீரை நிலத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து விடுவதால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகின்றது. ஒரு பிளாஸ்டிக் பை மண்ணில் புதைந்து மக்குவதற்கு 500 முதல் 1000 வருடங்கள் ஆகும் என்கிறது ஒரு ஆய்வின் அதிர்ச்சி தகவல். பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவை என்றாகி விட்டாலும் கூட அதன் ஆபத்து தலைமுறை கடந்தும் நீடிக்கும் என்ற அச்சத்தில் தான் பிளாஸ்டிக்கிற்கு வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் நிரந்தர தடையை விதித்துள்ளது தமிழக அரசு. எளிதில் மக்கும் தன்மை கொண்ட பயோ
நடப்பு நிகழ்வுகள் 16 - 06 - 2018 அறிவியல் தொழில்நுட்பம் : கூகுள் மேப்பில் வந்தாச்சு புது வசதி! கூகுள் மேப்பில் தற்போது புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது. மக்கள் வெளியில் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் யாரிடமாவது வழி கேட்டு செல்வதெல்லாம் பழைய ஸ்டைல். தற்போது அந்த வேலையை கூகுள் மேப்பே இலகுவாக செய்து வருகிறது. தற்போதுள்ள கூகுள் மேப்பில் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பதிவிட்டால் மட்டுமே போதும், அந்தப் பகுதிகளை இணையம் மூலம் இந்தச் செயலி சரியாகக் காட்டிவிடும். இதனால் யாரிடமும் நின்று வழி கேட்டு நேரத்தை வீணடிக்காமல், செல்லவேண்டிய இடத்திற்குச் சரியாகச் செல்லமுடிகிற வசதிகளை கூகுள் மேப் தருகிறது. இந்த வசதியை மேம்படுத்தும் வகையில் கூகுள் மேப், சார்ட்கட்ஸ் வசதிகளை படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக பயனாளர்களே எடிட் செய்யும் வசதி, பயனர் பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றை தானாகவே காட்டும் வசதி ஆகியவற்றை வழங்கியது இதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதி