####அறிவோம்####
வைட்டமின்கள் VITAMINS இவை கூட்டு அங்கக மூலக்கூறுகள். உணவில் மிகக்குறைவான அளவில் உள்ளன. இருப்பினும் உடல் வளர்ச்சி உடற்செயல் நிகழ்ச்சிகளுக்கு இவை அவசியமானவை. வைட்டமின்களால் நேரடியாகச் சக்தி தர இயலாது. ஆனால் சக்தியளிக்கும் உடற்செயலியல் மாற்றங்கள் நடைபெற இவை தேவை. வைட்டமின்கள் வகைகள் A வைட்டமின்கள் B வைட்டமின்கள் C வைட்டமின்கள் D வைட்டமின்கள் E வைட்டமின்கள் K வைட்டமின்கள் வைட்டமின் B, C நீரில் கரைபவை. இவை மிகுந்துள்ள காய், கனிகளை நறுக்கிய பின் நீரில் கழுவினால் நீரில் கரைந்து சென்றுவிடும். வைட்டமின் A, D, E, K அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் தங்கி வைட்டமினோசிஸ் எனும் மிகு வைட்டமின் நோய்கள் ஏற்படும். வைட்டமின் D அல்லது கால்சிபெரால் நமது தோலுக்கடியில் உள்ள எர்கோஸ்டிரால் எனும் பொருளின் மீது சூரிய ஒளி படுவதால் தோன்றக்கூடியது எனவே இதற்குச் " சூரிய ஒளி வைட்டமின் " என்று பெயர். வைட்டமின்களின் முக்கிய வேலைகள் 1. உடற்செயல் நிகழ்ச்சிகள் கண்பார்வை உணர்வில் வைட்டமின் A