####அறிவோம்####
அறிவியல் 550 பவுண்ட் எடையை ஒரு வினாடியில் ஒரு அடி உயரம் நகர்வதற்கு தேவைபடும் சக்தியே ஒரு குதிரை சக்தி எனப்படும். ஆப்டிகல் பைபரில் பயன்படும் தத்துவம் முழு அக எதிரொளிப்பு. நாளொன்றிற்கு சுமார் 1,700 லிட்டர் ரத்தம் சிறுநீரகத்தின் வழியே வந்து திரும்புகிறது. இதில் சுமார் 1.5 லிட்டர் வடிநீர் கழிவுகளாக பிரித்தெடுக்கப்பட்டு சிறுநீராக வெளிவருகிறது. சிறுநீரகத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1,200 மி.கி.ரத்தம் வருகிறது. 'மலேரியா' என்பது ஒரு இத்தாலியச் சொல். இதற்கு 'அசுத்தமான காற்று' என்று பொருள். ஆஸ்திரேலியாவில் 10 மீட்டர் நீளத்தில் ஒரு வாழைப்பழ சிலை வைக்கப்பட்டு உள்ளது. உலக வரலாற்றில் சீனாவில் 1876 முதல் 1879 வரையிலான ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சமே உலகின் கொடிய பஞ்சமாக அறியப்படுகிறது. இதில் ஏறத்தாழ 90 லட்சம் மக்கள் பலியானார்கள் என்று கணக்கிடப்பட்டது. மேரிகியூரி அம்மையாரின் வீடு ஒரே குடும்பத்தில் 4 பேர் நோபல் பரிசு வென்ற சாதனைக் குடும்பமாக விளங்குகிறது. மண்ணில் குளோரைடு கலத்திருந்தால் நீர் சுவைக்கும்.ஆனால் சுத்தமான நீர் என்றால் சுவையே இருக்காது. தண்ணீருக்கு அதில்...