####அறிவோம்####
இந்திய தேசிய இயக்கம் இந்திய தேசிய இயக்கம் (1905 - 1916) இந்திய தேசிய இயக்கத்தில் 1905 ஆம் ஆண்டு தொடங்கி தீவிரவாத காலம் தொடங்கியது. தீவிரவாதிகள் அல்லது தீவிர தேசியவாதிகள் துணிச்சலான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி பெற முடியும் என்று நம்பினர். பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால் ஆகிய மூவரும் தீவிரவாத தலைவர்களில் முக்கியமானவர்கள். தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் 1. 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் மிதவாதிகள் பெறத்தவறினர். 2. 1896 - 97 ஆண்டு தோன்றிய பஞ்சத்தினாலும், பிளேக் நோயினாலும் நாடு முழுவதிலும் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாயினர். ...