####அறிவோம்####
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்களின் 50-ஆவது மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்களின் 50-ஆவது மாநாடு இன்று (24.11.2019) நிறைவடைந்தது. இதில் பழங்குடியினர் நலன் மற்றும் தண்ணீர், வேளாண்மை, உயர்கல்வி, வாழ்வதை எளிதாக்குதல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த விஷயங்கள் தொடர்பாக தங்களின் அறிக்கைகளை ஆளுநர்களின் ஐந்து குழுவினர் சமர்ப்பித்தனர். ஆளுநர்கள் சிறப்பாக பங்காற்ற முடிகின்ற, செயல்பாட்டுக்குரிய விஷயங்கள் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் விவாதங்கள் பயனுள்ள நடைமுறைகள் என்பதை நிரூபித்துள்ளன என்றார். அமைச்சகங்கள் மற்றும் நித்தி ஆயோகின் பங்கேற்பு, விவாதங்களில் கவனம் குவிப்பதற்கும் செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும் உதவியாக இருந்தன என்று அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் முடிவுகளிலிருந்து பல பயனுள்ள தீர்வுகள் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆண்டு நவம்பர் 26, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் ...