####அறிவோம்####
கண்ணன் பாட்டு 1. கண்ணன் என் தோழன். புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் வத்ஸல ரசம் பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே - இனி என்ன வழியென்று கேட்கில், உபாயம் இருகணத் தேயுரைப் பான்; - அந்தக் கண்ணன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு உன்னை யடைந்தேன் என்னில் உபாயம்ஒருகணத் தேயுரைப் பான். ... 1 கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற் கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ் சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில் தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில் உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடு வான். ... 2 பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு பேச்சினி லேசொல்லுவான்; உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன் உண்ணும் வழியுரைப் பான்; அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் அரைநொடிக் குள்வருவான்; மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன் வாழ்வினுக் கெங்கள்கண் ணன். ... 3 கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங் கேலி பொறுத்திடு வான்; - எனை ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் ஆறுதல் செய்திடுவான்