####அறிவோம்####
பிரம்ம சமாஜம் பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சபை கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். 19ஆம் நூற்றாண்டிலேயே பல பிரிவுகளாக பிரம்ம சமாஜம் பிரிந்திருந்தது. 1861 ஆம் ஆண்டு நவீன் சந்திர ராய் தற்போதுள்ள பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தார். இராசாராம் மோகன்ராய் - பிரம்ம சபை இராசாராம் மோகன்ராய் கி.பி. 1772ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஹீபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்...