####அறிவோம்####
பொது அறிவியல் 1. குரோனா மீட்டர் என்பது யாது? கடல் பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி. 2. சாலினோ மீட்டர் என்பது யாது? உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பத்தின் மூலம் அவற்றின் கரைசல் செறிவை தீர்மானிக்க உதவும் ஒரு வகை தரவமானி 3. செய்ஸ்மோ கிராப் என்பது யாது? நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும்,தோற்றத்தையும் பதிவு செய்யும் பூகம்ப அளவி. 4. குவாட்ரண்ட் என்பது யாது? பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி. 5. டிரான்ஸிஸ்டர் என்பது யாது? மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள். 6. டெலிபிரின்டர் என்பது யாது? தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும்,தகவல்களை அச்செழுத்தவும் உதவும் தொலை எழுதி. 7. டெலி மீட்டர் என்பது யாது? வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி. 8. டெலஸ்கோப் என்பது யாது? தொலைதூரப் பொருள்களை பெருக்கிக்கட்டும் தொலை காட்டி. 9. டைனமோ என...