####அறிவோம்####
கண்ணன் பாட்டு 20. கண்ணம்மா என் காதலி - 5. (குறிப்பிடம் தவறியது) செஞ்சுருட்டி - ஆதி தாளம் சிருங்கார ரசம் தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே, பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய். வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்கு தடீ! பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியு தடீ! ... 1 மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ! வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ? ... 2 கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்; அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற் கில்லை; கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே; நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள். ... 3 கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே, ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே, பாடிப் பர