####அறிவோம்####
கண்ணன் பாட்டு 5. கண்ணன் என் அரசன். பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும் பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்; நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். ... 1 கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம் கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே; எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம் இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . ... 2 படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல் பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்; 'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்' என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். ... 3 கொல்லப் பூத மனுப்பிடு மாமனே கோலு யர்த்துல காண்டு களித்திட, முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். ... 4 வான நீர்க்கு வருந்தும் பயிரென மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும், தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள் தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். ... 5 காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம் கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால் நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்; நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? ... 6 நாம வன்வலி நம்பியி ருக்கவும், நாண மின்றிப் பதுங்கி வளருவான்; தீ...