####அறிவோம்####
கண்ணன் பாட்டு 15. கண்ணன் என் காந்தன். வராளி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் கனிகள் கொண்டுதரும் - கண்ணன் கற்கண்டு போலினிதாய்; பனிசெய் சந்தனமும் - பின்னும் பல்வகை அத்தர்களும், குனியும் வாண்முகத்தான் - கண்ணன் குலவி நெற்றியிலே இனிய பொட்டிடவே - வண்ணம் இயன்ற சவ்வாதும். ... 1 கொண்டை முடிப்பதற்கே; - மணங் கூடு தயிலங்களும், வண்டு விழியினுக்கே - கண்ணன் மையுங் கொண்டுதரும்; தண்டைப் பதங்களுக்கே - செம்மை சார்த்துசெம் பஞ்சுதரும்; பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன் பேசருந் தெய்வமடீ! ... 2 குங்குமங் கொண்டுவரும் - கண்ணன் குழைத்து மார்பொழுத; சங்கையி லாதபணம் - தந்தே தழுவி மையல் செய்யும்; பங்கமொன் றில்லாமல் - மகம் பார்த்திருந் தாற்போதும்; மங்கள மாகுமடீ! - பின்னோர் வருத்த மில்லையடி! . ... 3