####அறிவோம்####
இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். திட்டத்திற்கான காரணங்கள்: வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. வரலாறு: நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது....