####அறிவோம்####
 
 ஒலிவேறுபாடு:  1. அரம்  -  அராவும் கருவி  2. அறம் -  தருமம்  3. அரி    -   துண்டாக்கு, திருமால்  4. அறி   -  தெரிந்துக்கொள்  5. அருகு -  பக்கம்  6. அறுகு -  ஒருவகைப்புல்  7. அரை -  பாதி  8. அறை  -  கூறு  9. இரத்தல் -  யாசித்தல்  10. இறத்தல் -  சாதல்  11. இரை -  தீனி  12. இறை -  கடவுள்  13. உரவு -  வலிமை  14. உறவு -  சொந்தம்  15. உரி -  தோலை உரி  16. உறி -  பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்  17. உரை  -  சொல்,  18. உறை  -  வாசி, மேல் உறை  19. துரவு  -  கிணறு  20. துறவு -  சந்நியாசம்  21. கருத்து -  எண்ணம்  22. கறுத்து -  கருமை நிறம்  23. நரை  -  வெண்மயிர்  24. நறை -  தேன்  25. எரி  -   நெருப்பு  26. ஏறி  -   வீசுதல்  27. ஏரி  -   பெரிய நீர்நிலை  28. ஏறி  -  மேலே ஏறி  29. கரி   -  அடுப்புக்கரி, யானை  30. கறி   -  காய்கறி, மிளகு  ...