####அறிவோம்####
கண்ணன் பாட்டு 11. கண்ணன் என் காதலன் - 2. உறக்கமும் விழிப்பும் நாதநாமக்கிரியை - ஆதி தாளம் ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம். நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி - உங்கள் நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்; சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே - என்ன தூளி படுகுதடி, இவ்விடத்திலே. ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! - அன்னை ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்; சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், - மிகச் சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . ... 1 நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது நாளுக்கு நாளதிக மாகி விட்டதே; கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக் கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும், ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்; அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும், பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால் பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், ... 2 பத்தினி யாளையொரு பண்ணை வெளியில் பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும், நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும், கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக் கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும், வித்தைப் பெயருடைய வீண