####அறிவோம்####
கண்ணன் பாட்டு 21. கண்ணம்மா என் காதலி - 6. யோகம் பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு; தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு; வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்; தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ... 1 வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி! மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ... 2 வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு; பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு; ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ... 3 வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு; பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு; எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே; கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ... 4 வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு; பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு; நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்? ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ... 5 காதலடி நீ யெனக்குக் காந்தமடி நான...