####அறிவோம்####
நிதிநிலை அறிக்கை 2019 -20: சிறப்பு அம்சங்கள் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் 2019-20 நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (05.07.2019) தாக்கல் செய்து தமது முதலாவது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். 2019 நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு; 10 ஆண்டுகளுக்கான 10 அம்ச தொலைநோக்குத் திட்டம் # மக்கள் விருப்பங்களுக்கு ஏற்ப புதிய இந்தியா உருவாக்கப்படும்: குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுமை. # மாசற்ற இந்தியாவை உருவாக்குவதன் மூலம், பசுமையான பூமித்தாய் மற்றும் நீல வானம் என்பதை அடைதல். # பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் டிஜிட்டல் இந்தியாவை அறிமுகப்படுத்துதல். # ககன்யான், சந்திரயான் மற்றும் பிற விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் திட்டங்களை செயல்படுத்துதல். # அமைப்ப ரீதியான மற்றும் சமூக கட்டமைப்புகளை உருவாக்குதல். # தண்ணீர், நீர்மேலாண்மை, தூய்மையான நதிகள். # நீலப் பொருளாதாரம். # உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் ஏற்றுமத...