####அறிவோம்####
தமிழ்த் திணைப் பகுதிகள் # குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த பகுதியும். இங்கு வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் வழக்கமாகும். # முல்லை - காடும் காடு சார்ந்த பகுதியும். கால்நடை மேய்த்தல், விவசாயம் தொழில். # மருதம் - வயலும் வயல் சார்ந்த பகுதியும். நீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்வது. # நெய்தல் - கடலும் கடல் சார்ந்த பகுதியும். மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி. # பாலை - மணலும் மணல் சார்ந்த பகுதியும். கால்நடை திருட்டு, கொள்ளை அடித்தல்.