####அறிவோம்####
பொது அறிவியல் 1. அம்மீட்டர் என்பது யாது? மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது. 2. அலிமோ மீட்டர் என்பது யாது? காற்றின் வேகமும்,வீசும் திசையும் அளந்தறிய உதவும் கற்று வீச்சளவி. 3. ஆடியோ மீட்டர் என்பது யாது? கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி. 4. ஆல்டி மீட்டர் என்பது யாது? குத்துயரங்களை அளக்க உதவும் உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி. 5. எலக்ட்ரோஸ்கோப் என்பது யாது? மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி. 6. கம்யுடேட்டர் என்பது யாது? மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி. 7. கோலரி மீட்டர் என்பது யாது? நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி. 8. கலோரி மீட்டர் என்பது யாது? வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி. 9. கால்வனோ மீட்டர் என்பது யாது? மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி. 10. கிளினிக்கல் தெர்மோமீட்டர் என்பது யாது? மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி.