####அறிவோம்####
கண்ணன் பாட்டு 2. கண்ணன் என் தாய். (நொண்டிச் சிந்து) உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்; வண்ணமுற வைத்தெனக் கே - என்றன் வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், கண்ணனெனும் பெயருடையாள், - என்னை கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து மண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். ... 1 இன்பமெனச் சிலகதைகள் - எனக் கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள் - கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள் என்பருவம் என்றன் விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில் அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2 விந்தைவிந்தை யாக எனக்கே - பல விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்; சந்திரனென் றொரு பொம்மை - அதில் தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்; மந்தை மந்தையா மேகம் - பல வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்; முந்தஒரு சூரியனுண்டு - அதன் முகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. ... 3 வானத்து மீன்க ளுண்டு - சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; நானத்தைக் கணக்கிடவே - மன் நாடிமிக முயல்கினும் கூடுவதில்...