####அறிவோம்####
2019 நவம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் வசூல் 2019 நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவை வரி வருவாய், ரூ.1,03,492 கோடி அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.19,592 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.27,144 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.49,028 கோடியும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.20,948 கோடி உட்பட) மற்றும் கூடுதல் வரியாக ரூ.7,727 கோடியும் (இறக்குமதி மூலம் வசூலான ரூ.869 கோடி உட்பட) அடங்கும். அக்டோபர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி படிவம் 3-பி, 2019 நவம்பர் 30 ஆம் தேதிவரை 77.83 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.25,150 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.17,431 கோடியும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. 2019 நவம்பர் மாதத்திற்கான வழக்கமான பகிர்வுக்குப் பிறகு, மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.44,742 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.44,576 கோடி வருவாயும் மத்...