####அறிவோம்####
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கான ஹெல்த்கேர் ப்ளஸ் காப்பீடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்ட ஹெல்த்கேர் ப்ளஸ் காப்பீட்டு பாலிசியை யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக அறிமுகம் செய்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு கர்ணம் சேகர், இந்தப் பாலிசியை இன்று சென்னையில் உள்ள வங்கியின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். யுனிவர்சல் சோம்போ பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் திரு. ஓ.என்.சிங் மற்றும் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50,000, அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பாலிசி வழங்கப்படும். இந்த பாலிசிக்கு 50 வயது வரை மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...