####அறிவோம்####
கண்ணன் பாட்டு 19. கண்ணம்மா என் காதலி - 4. (நாணிக் கண் புதைத்தல்) நாதநாமக்கிரியை - ஆதிதாளம் சிருங்கார ரசம் மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன் மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ? சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ? வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன் மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன். என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக் கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! ... 1 கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங் கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ! அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண் டாவிவயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ? பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில் பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ? என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? ... 2 நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ? பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள் பன்னி உபசரணை பேசுவ துண்டோ ? நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ? மூட்டும் விறகிளை