####அறிவோம்####
 
                     தமிழ்நாடு             அரசு தொடக்கப் பள்ளியை மீட்டெடுத்த கிராம மக்கள்!          தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்க்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நிகழ்ந்துள்ளது.           சீதபற்பநல்லூரை அடுத்த கருவநல்லூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வெறும் 6 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரே அடியாக குறைந்தது.          40 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதை அறிந்த இளைஞர்களும், ஊர்மக்களும் பள்ளியை மீட்டெடுக்க போராடினர். முதற்கட்டமாக தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க நினைக்கும் பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.       ...