####அறிவோம்####
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக சோமா ராய் பர்மன் பொறுப்பேற்பு மத்திய அரசின் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக 1986 ஆம் ஆண்டு இந்திய குடிமைக் கணக்கு பணி தொகுப்பைச் சேர்ந்த திருமதி சோமா ராய் பர்மன், இன்று (01.12.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். 24-வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியான திருமதி பர்மன், முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பை வகிக்கும் 7-வது பெண் அதிகாரியாவார். 2019 டிசம்பர் ஒன்று முதல் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக திருமதி பர்மனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தில்லிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் புள்ளியியலில் எம்ஃபில் பட்டம் பெற்றவரான திருமதி பர்மன், தமது 33 ஆண்டுகால பதவி காலத்தில், உள்துறை, தகவல் ஒலிபரப்பு, தொழில், நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் கப்பல், சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை போன்ற துறைகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வூதியம்) மற்றும் புதுதில்லியில் உள்ள அரசு கணக்கு மற்றும்