####அறிவோம்####
கண்ணன் பாட்டு 8. கண்ணன் என் குழந்தை. (பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்) ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப தநீத - பதப - பா பபப -பதப - பமா - கரிஸா ரிகம - ரிகரி - ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு மனோவாபப்படி மாற்றி பாடுக. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய்! ... 1 பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என் முன்னே ஆடி வருந் தேனே! . ... 2 ஓடி வருகையிலே - கண்ணம்மா! உள்ளங் குளிரு தடீ! ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவி தழுவு தடீ! ... 3 உச்சி தனை முகந்தால் - கருவம் ஓங்கி வளரு தடீ! மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடீ! ... 4 கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான் கள்வெறி கொள்ளு தடீ! உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா! உன்மத்த மாகுதடீ! ... 5 சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது சஞ்சல மாகு தடீ! நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6 உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில் உதிரம் கொட்டு தடீ! என்கண்ணிற் பாவையன்றோ? -...