####அறிவோம்####
நேரு அறிக்கை நேரு அறிக்கை (Nehru Report) என்பது பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்கள் எத்தகு அரசியல் சீர்திருத்தங்களை விரும்புகிறார்கள் என்பதை காலனிய அரசுக்கு எடுத்துக்கூற 1929 ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை. மோதிலால் நேருதலைமையிலான அனைத்து கட்சிக் குழு ஒன்று இவ்வறிக்கையைத் தயார் செய்தது. 1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களைக் குறித்து ஆராய சைமன் குழுவை பிரித்தானிய அரசு நியமித்தது. இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரமுள்ள இக்குழுவில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்று இந்திய தேசிய காங்கிரசு உள்ளிட்ட இந்திய அமைப்புகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. சைமன் குழுவைப் புறக்கணித்து விட்டு அனைத்துக் கட்சி குழு ஒன்றை உருவாக்கி ஒரு போட்டி அறிக்கையைத் தயார் செய்தன. இக்குழுவில் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். மோதிலால் நேரு தலைவராகவும் ஜவகர்லால் நேரு செயலாளராகவும் இருந்த இக்குழுவில் இரு முசுலிம்கள் உட்பட ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவ