####அறிவோம்####
இந்தியாவின் - முக்கிய வினாக்கள் 1. தேசபந்து என அழைக்கப்பட்டவர் சித்தரஞ்சன் தாஸ். 2. முதன் முதலில் இந்தியாவில் நெடுஞ்சாலை அமைத்த ஆங்கிலேய கவர்னர் "டல்ஹௌசி" . 3. காங்கிரஸ் தாத்தா என அழைக்கப்பட்டவர் "தாதாபாய் நௌரோஜி". 4. அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்பட்டவர் டாக்டர் அம்பேத்கர் . 5. நமது நாட்டின் எல்லை பாதுகாப்பு படை 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 6. இந்தியா தேசியக் காங்கிரசின் முதல் பெண் தலைவி "அன்னி பெசன்ட் அம்மையார்" . 7. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண் அமைச்சர் " ராஜகுமாரி அம்ரித் கௌர் " ஆவார். 8. அரியானா என்றால் " கடவுளின் இருப்பிடம் " என்று பொருள். 9. கணக்கில் கட்டப்படாத பணம் கறுப்புப் பணம். இந்தியாவில் 60,000 கோடி கறுப்புப் பணம் உள்ளது. 10. உலகில் மிக அதிகமான அஞ்சல் நிலையம் ( POST OFFICE ) உள்ள நாடு இந்தியா .