####அறிவோம்####
கண்ணன் பாட்டு 22. கண்ணன் என் ஆண்டான். புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், கருணை தஞ்ச முலகினில் எங்கணு மின்றித் தவித்துத் தடுமாறி, பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன், பார முனக் காண்டே! ஆண்டே! - பாரமுனக் காண்டே! ... 1 துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்; அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின் ஆணை வழி நடப்பேன்; ஆண்டே! - ஆணைவழி நடப்பேன். ... 2 சேரி முழுதும் பறையடித் தேயருட் சீர்த்திகள் பாடிடுவேன்; பேரிகை கொட்டித் திசைக ளதிரநின் பெயர் முழக்கிடுவேன்; ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன். ... 3 பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன் பாங்கிய மோங்கி விட்டான்; கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில் காதலுற் றிங்கு வந்தேன்; ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன். ... 4 காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன் காலிகள் மேய்த்திடுவேன்; பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென் பக்குவஞ் சொல்லாண்டே! ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே! ... 5 தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச் சோதனை போடாண்டே! காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக் கட்டியடி யாண்டே! ஆண்டே! - கட்டியடி யாண்டே! ... 6 பெண்ட