####அறிவோம்####
குடும்ப விளக்கு பகுதி 2 விருந்தோம்பல். சிந்துக் கண்ணி தலைவன் கடைக்குச் சென்றான் அன்பு மணவாளன் ஆன வுணவருந்திப் பின்பு, மனைவிதந்த பேச்சருந்தித்-தன்புதுச் சட்டை யுடுத்துத் தனிமூ விரற்கடையில் பட்டை மடித்த படியணிந்து-வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக் கலைந்த முடியதுக்கிக் "கண்ணேசெல் கின்றேன் கடைக்"கென்றான்-பெண்வாய்க் கடைவிரித்துப் புன்னகைப்புக் காட்டி "நன்" றென்றாள்; குடைவிரித்துத் தோள்சாய்த்துக் கொண்டே-நடை விரித்தான். தலைவி விருந்தினரை வரவேற்றாள் தன்னருமை மக்கள் தமிழ்க்கழகம் தாம்செல்லப் பின்னரும் ஐயன்செல்லப் பெண்ணரசி-முன்சுவரில் மாட்டி யிருந்த மணிப்பொறி "இரண்டென்று" காட்டி யிருந்ததுவும் கண்டவளாய்த்-தீட்டிச் சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி உடல்நிமிர்ந்தாள் கண்கள் உவந்தாள்-நடைவீட்டைத் தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள் கையேந்திப் பூண்ட மகிழ்வால் புகழேந்தி-வேண்டி "வருக!அம் மாவருக! ஐயா வருக! வருக! பாப்பா தம்பி" யென்று-பெருகன்பால் பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள,முகம் அன்றலர்ந்த செந்தா மரையாக-நன்றே வரவேற்றாள்; வந்தவரின் பெட்டி படுக்கை அருகி...