####அறிவோம்####
இந்தியாவில் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய 10 வரலாற்றுத் தளங்கள். நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்தும் கட்டிட கலைகளும், ஓவியங்களும், இடங்களும் இங்கே நிறையவே காணப்படுகின்றன. எவ்வளவு தான் உலகம் முன்னோக்கி வேகமாக சென்றாலும், காலங்களை கடந்து செல்லும் போது, வரலாற்றின் சிறப்பினை எண்ணி கண் வியர்த்து தான் நிற்கிறோம். இங்கே காணும் வரலாற்று நினைவிடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மனதை காட்சிகளை கொண்டு வருடி இனிமையான ஒரு உணர்வை தருகிறது. அப்படி என்ன தான் இந்தியாவில் நம்மால் பார்க்க முடிகிறது என்னும் கேள்விக்கணையை யாரும் அவ்வளவு எளிதில் அடுத்தவர் மீது தொடுத்து விட முடியாது. ஆம், இங்கே புகழ் பெற்ற இடங்களை கண்களால் நாம் காணவில்லையென்றாலும், காதுகளால் கேட்டு மனதை வார்த்தைகளின் முன்பு நாம் பறிகொடுத்து காதல் கொள்வது உறுதி. ...