####அறிவோம்####
இந்தியாவில் உள்ள உலக பராம்பரியச் சின்னங்கள்: இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதில் 25 இடங்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தை விளக்குவதாகவும், 7 இடங்கள் இயற்கைச் சிறப்பு மிக்க இடங்களாகவும் உள்ளன. 1983-ல் ஆக்ராக் கோட்டையும், அஜந்தா குகைகளும் முதலில் பராம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் எவை என்று பார்ப்போம். கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா, ஹிமாச்சலப் பிரதேசம் இது ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் குல்லு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது உயர்ந்த சிகரங்களையும், புல்வெளிகளையும், ஆற்றுப்படுகைகளில் காடுகளையும் கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மலைகளின் மேல் உள்ள பனிகள் உருகுவதால் சிந்து நதியின் கிளை நதிகள் இங்கிருந்து உருவாகுகின்றன. 375-க்கும் மேற்பட்ட தாவர, விலங்கினங்கள் இங்கு காணப்படுகின்றன. ஊசியிலைக் காடுகள், பனிச்சிகரங்கள்,