####அறிவோம்####
6 வகுப்பு வரலாறு 1. தமிழகத்தில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடம்? அரியலூர் . 2. தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம்? ஆதிச்சநல்லூர். 3. முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்? ஆதிச்சநல்லூர். 4. வரலாற்றை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்? இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் 1. வரலாற்றுக் காலம், 2. வரலாற்றுக்கு முந்தைய காலம். 5. வரலாற்று காலம் என்றால் என்ன? அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களை கொண்ட காலத்தை வரலாற்று காலம் எனலாம். 6. வரலாற்று முற்பட்ட காலத்தை அறிய உதவும் ஆதாரங்கள்? அக்காலத்தை சார்ந்த பொருள்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள், படிமங்கள். 7. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்கள்? பழைய கற்கலாம் - கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் புதிய கற்கலாம் - கி.மு. 10,000 - கி.மு. 4000 செம்புக் கற்கலாம் - கி.ம...