####அறிவோம்####
UNICEF அறிக்கை புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் 2020-ம் புத்தாண்டு அன்று அதிகமான குழந்தைகள் பிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்: UNICEF அறிக்கை புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக UNICEF (United Nations Children’s Emergency Fund) என்கிற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன. உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் 2020-ம் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக UNICEF அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2020 ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. இதில் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் பிஜி தீவில் 2020-ம் ஆண்டின் முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக அமெரிக்காவில் குழந்தை பிறந்துள்...