####அறிவோம்####
கண்ணன் பாட்டு 9. கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை. நகேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம் ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் - அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத) 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் - சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத) 3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை அழஅழச் செய்துபின், கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன் - என்பான் - என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத) 4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்; வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத) 5. புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது பொங்கித் ததும்புநற் பீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே - அதைக் கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத