####அறிவோம்####
கண்ணன் பாட்டு 10. கண்ணன் என் காதலன். செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரசம் தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சந் துடித்த தடீ! கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை கொண்டு மிகவும் நொந்தேன்; வேண்டும் பொருளை யெல்லாம் - மனது வெறுத்து விட்டதடீ! . ... 1 பாயின் மிசை நானும் - தனியே படுத் திருக்கை யிலே, தாயினைக் கண்டாலும் - சகியே! சலிப்பு வந்த தடீ! வாயினில் வந்ததெல்லாம் - சகியே! வளர்த்துப் பேசிடுவீர்; நோயினைப் போலஞ் சினேன்; - சகியே! நுங்க ளுறவை யெல் லாம். ... 2 உணவு செல்லவில்லை; - சகியே! உறக்கங் கொள்ளவில்லை. மணம் விரும்பவில்லை; - சகியே! மலர் பிடிக்க வில்லை; குண முறுதி யில்லை; - எதிலும் குழப்பம் வந்த தடீ! கணமும் உளத்திலே - சுகமே காணக் கிடைத்ததில்லை. ... 3 பாலுங் கசந்தடீ தடீ! - சகியே! படுக்கை நொந்த தடீ! கோலக் கிளிமொழியும் - செவியில் குத்த லெடுத்த தடீ! நாலு வயித்தியரும் - இனிமேல் நம்புதற் கில்லை யென்றார்; பாலத்துச் சோசியனும் - கிரகம் படுத்து மென்று விட்டான். ... 4 கனவு கண்டதிலே - ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல், இனம் விளங்க வில்லை - எவ