####அறிவோம்####
செயற்கை சூரியன் உருவாக்கும் பணியில் சீனா... எப்படி சாத்தியம்? சீனர்கள் என்றாலே வித்தியாசத்துக்குப் பேர் போனவர்கள்தானே. புதிது புதிதாகத் திட்டங்கள், விரைவான செயல்பாடு, மலிவான விலையில் பொருள்கள் என அவர்கள் மேல் ஒரு பிம்பம் உள்ளது. இந்த முறை அவர்கள் கையில் எடுத்திருப்பது செயற்கை சூரியன்' (Artificial sun). கேட்கவே வித்தியாசமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறதல்லவா? நீண்ட காலமாகவே இப்படி ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்பது அறிவியலாளர்கள் பலரின் விருப்பமாகவே இருக்கிறது. அதற்கு இப்போது செயல் வடிவம் கொடுத்திருக்கிறது சீனா. இது எப்படி சாத்தியம், இதனால் நமக்கு என்ன பயன், இப்போது இப்படி ஒன்று தேவையா எனப் பல கேள்விகள் அனைவரது மனதிலும் எழும். இதற்கான பதிலை ஒரு சிறிய அறிவியல் விளக்கத்தோடு தொடங்கலாம். நாம் இப்போது அணு உலைகளில் அணுக்கரு பிளவு' என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறையில் யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை சிறு சிறு அணுக்களாகப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கும்போது அதிக அளவிலான ஆற்றல் வெளிப்படும். அந்த ஆற்றலைப் பயன்படுத்திதான் அணு உலைகளில் மின்சாரம் உர...