####அறிவோம்####
இந்திய வட்டமேசை மாநாடுகள் இந்திய வட்டமேசை மாநாடுகள் (Round Table Conferences) என்பன 1930-32 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை ஏற்படுத்த பிரித்தானிய அரசினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டது. 1929ல் வெளியான சைமன் குழுவின் அறிக்கை பல தரப்பட்ட இந்தியர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த கட்ட அரசியல் சீர்திருத்தங்களைத் தீர்மானிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. மேலும் 1930 சட்ட மறுப்பு இயக்கத்தால் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. பல பிரித்தானியத் தலைவர்கள் இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கும் காலம் வந்துவிட்டதாகக் கருதினர். எனவே சைமன் குழுவின் பரிந்துரையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வட்டமேசை மாநாடுகள் கூட்டப்பட்டன. மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் இறுதியாக எந்த முடிவும் எடுக்கபப...